பசு இறைச்சி
கொலைக் கூடம்
தடுத்து நிறுத்தப்பட்டது

பசு இறைச்சி கொலைக் கூடம் தடுத்து நிறுத்தப்பட்டது

1994 - ஆம் வருடம் அப்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசைப் பயன்படுத்தி கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த எம்.கே.யூசுப் அலி என்பவர் ஃபேர் எக்ஸ்போர்ட்ஸ் ( இந்தியா) என்ற நிறுவனத்தின் பெயரில் பழச்சாறு மற்றும் ஜாம் போன்றவை தயார் செய்யும் தொழிற்சாலை அமைப்பதாகக் கூறி அனுமதி பெற்றார் .

இத்தொழிற்சாலையைப் பொள்ளாச்சிக்கு அருகில் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள கணபதிபாளையத்தில் அமைப்பதாக கூறி அப்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரத்தினம் என்பவரைப் பயன்படுத்தி 1.20 லட்சம் மதிப்பிலான 200 ஏக்கர் நிலங்களை 50 - 60 ஆயிரம் விலை கொடுத்து வாங்கினர். இத்தொழில் நிலையத்தில் 1500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் , 5000 மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் எனக் கூறி வந்தனர் .

இந்நிலையில் , 1996 இல் தி.மு.க. ஆட்சி மாறிய பின் , முந்தைய பழச்சாறு தொழிற்சாலை திட்டம் அடியோடு மாற்றப்பட்டு புதிய முதல்வர் கருணாநிதியின் புதிய ஒப்பந்தப்படி நாளொன்றுக்கு 3000 மாடுகளைக் கொன்று , இறைச்சிகளைப் பதப்படுத்தி , வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நவீன பசுக் கொலைக்கூடமாக மாற்றப்பட்டது .

அதுமட்டுமன்றி , தமிழக அரசும் முதலீட்டில் 11 சதவீதம் பங்குதாரராக பொறுப்பேற்கும் என்றும் கருணாநிதி அறிவித்தார் . இச்செய்தி கேட்டு மக்கள் பெரிதும் அதிர்ந்து போயினர். இந்த குரூரமான கொலை பாதகச் செயலை போராடி முறியடித்தே தீரும் என்று இந்துமுன்னணி அறிவித்தது.

தமிழகம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் , பொதுக்கூட்டங்கள் போட்டும் , துண்டறிக்கைகள் வெளியிட்டும் , தமிழகத்தின் குக்கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்தும் இச்செய்தியைப் பக்திபூர்வமாக விளக்க வேண்டி கோமாதா ரத யாத்திரை ஒன்று துவங்குவதென முடிவு செய்யப்பட்டது .

 

கன்றுடன் கூடிய பசுவும் , கிருஷ்ணனும் , நந்தி வாகனத்தில் அமர்ந்த நிலையில் சிவன் , பார்வதி ஆகிய திருவிக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு , 14.01.1997 செவ்வாய் அன்று மாலை பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் கோமாதா ரத பவனி துவக்கவிழா ஏற்பாடாகி இருந்தது .

அனைத்து ஏற்பாடுகளையும் அன்றைய இணை அமைப்பாளர் மா . வீரபாகு உடனிருந்து செய்திருந்தார் . துவக்கவிழா நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் பங்கு கொண்டனர் . பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் தவத்திரு . மருதாசல அடிகளார் ஆசியுரை வழங்கினார் . நிறைவாக , கோபால் ஜியின் சிறப்புரையுடன் , கோமாதா ரத பவனி துவங்கியது .

ரத பவனி துவங்கி சரியாக 15 நாட்கள் அந்த மாவட்டத்தில் நடைபெற்றது . 11.04.1997 அன்று நெல்லை , தூத்துக்குடி மாவட்டப் பிரச்சாரத்திற்குப் பயணமானது . நெல்லை மாவட்டம் , புளியங்குடியைக் கடந்து திருச்செந்தூர் நோக்கிச் செல்லும் வழியில் , சாம்பவர் சாலையைக் கடக்கும்போது , எதிர்பாராத விதமாக ரதத்திற்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டது . அதன் காரணமாகக் அரசு அந்த ரத யாத்திரைக்குப் பூரணமாக தடை விதித்தது .

ஆயினும் பிரச்சாரம் நின்ற பாடில்லை . தொடர்ந்து கிராமம் கிராமமாக பிரச்சாரம் நடந்து கொண்டே இருந்தது . நிறைவாக 29.06.1997 அன்று மிகப் பெரிய வேள்வியுடன் , மாநாடும் கணபதிபாளையம் , கோவிந்தாபுரத்தில் நடைபெற்றது .

இந்து முன்னணியின் தொடர் பிரச்சாரம் காரணமாக பசுக்கொலை கூடம் பொள்ளாச்சி கணபதிபாளையத்தில் துவங்க மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தார்கள். மக்களிடம் ஏற்பட்ட மாற்றம் ஆட்சியாளர்களை மிரளச் செய்தது .

இந்த திட்டத்தை கை விடுவதாக அரசு அறிவித்தது . மக்கள் சக்தியை திரட்டி இந்து முன்னணி வென்றது .

மேலும் படிக்க