கோகுலம் பசுமடம்
பாரதியார் குருகுலத்தில் கோகுலம் பசுமடம் என்பது கடந்த 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த பசுமடத்தின் நோக்கம் வியாபாரத்திற்காக , அடிமாடாக வெட்டப்படுவதற்கு கொண்டு செல்லப்படும் பசுக்களை மீட்பதும், பிறர் தானமாக கொடுக்கும் பசுக்களை அதனுடைய இறப்பு வரை நன்றாக கவனிப்பதே ஆகும். ஹிந்துக்கள் புனிதமாக வணங்கும் பசுவை மாமிசத்திற்காக கொலை செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் . ஆகவே பசுவதை தடுப்பிற்கு இந்த பசுமடம் முன்மாதிரியாக உள்ளது.இந்த பசுமடத்தில் வயது முதிர்ந்த பசுக்கள் சிறப்பாக பாரமரிக்கப்பட்டு அவை இறந்தவுடன் பசுமடத்தின் அருகிலேயே அடக்கம் செய்யப்படுகிறது.
பசுமடத்தின் பராமரிப்பு பிறரின் நன்கொடை மூலம் பெறப்பட்டு நடத்தப்படுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் . ரிஷிகளும் வாழும் அம்சமாக பசு இருப்பதாலும், மக்கள் அனைவருக்கும் இரண்டாவது தாயாக பசு இருப்பதால் ஹிந்துக்கள் பசுவை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.பசுவில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் மருத்துவ குணம் வாய்ந்தது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் உலகில் பசு வளர்ப்பு குறைந்து வருகிறது அதிகமான பசுக்களை வளர்ப்பதில் கோகுலம் பசுமடம் முனைப்பு காட்டி வருகிறது.