இந்து
வழக்கறிஞர்
முன்னணி

தர்மத்தின் அடிப்படையில் சட்டம்

இந்து வழக்கறிஞர் முன்னணி ஏன்?

நமது தேசத்தில் தர்மமே முக்கியமானது . தர்மத்தின் அடிப்படையிலேயே சட்டங்கள் இயற்றப்பட்டன. ஆனால் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பது நடைமுறையில் இல்லை எனவே அனைவருக்கும் நீதி கிடைத்திடவே இந்து வழக்கறிஞர் முன்னணி

இந்து வழக்கறிஞர் முன்னணி இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பாக 2005 ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்து முன்னணி இயக்கம் இந்துக்களுக்காக வாதாட போராட பரிந்து பேச ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். 1980இல் இந்து முன்னணி ஆரம்பிக்கப்பட்டு இந்துக்களின் பிரச்சினைகளுக்காக அறவழியில் சட்டத்திற்கு உட்பட்டு போராட்டங்கள் நடத்தியது.

தமிழகத்தில் திராவிட ஆட்சியில் இழைக்கப்பட்ட அநீதிகள்

பொது வீதிகளில் அரசியல் சாசனம் சொன்னபடி சுவாமி ஊர்வலங்களையும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களையும் இந்து முன்னணி நடத்தியது. தேசிய நெடுஞ்சாலைகளில் மசூதியை கட்டிக்கொண்டு இந்து வழிபாட்டு ஊர்வலங்களை முஸ்லிம்கள் தடுத்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவு தெளிவாக இருந்தபோதும் முஸ்லிம்களின் அராஜகத்திற்கு பயந்து காவல்துறை வழிபாடு, ஊர்வலங்களை தடுத்தது. அவுரங்கசீப் காலத்தில் கூட இந்துக்களின் சுவாமி ஊர்வலங்களுக்கு தடை இல்லை, ஆனால் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை . 1972இல் சேலத்தில் ராமர் விக்கிரகத்திற்கு செருப்பு மாலை, விளக்குமாறால் அடித்து ஊர்வலம் நடத்தினர் , இதற்கும் சரியான நீதி கிடைக்கவில்லை. திராவிட கட்சிகளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் இந்துக்களுக்கு எதிராகவே தொடர்ந்து தீர்ப்பு அளித்து வருகின்றனர். ஹிந்து சமுதாயம் தாக்கப்பட்ட போது இந்து முன்னணி தொண்டர்கள் எதிர்த்து போராடினர். அதேபோல் இந்துக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக இந்து முன்னணி போராடியது. ஆலயங்கள் அரசின் பிடியில் இருந்து மீட்கவும், ஆலய சொத்துக்களை காக்கவும் இந்து முன்னணி தொண்டர்கள் போராடினர்.

தர்மத்திற்காக போராடியவர்கள் மீது பொய் வழக்குகள்

இதனால் இந்து முன்னணி தொண்டர்கள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போடப்பட்டது. இந்து முன்னணி தொண்டர்கள் சிறைகளில் வாடினர். இவர்களுக்கு பெயில் எடுக்க ஆளில்லை. வக்கீல்களுக்கு கொடுக்க போதிய பணம் இல்லை. போராடியவர்கள் பெரும்பாலும் அன்றாடம் காய்ச்சிகள். இதனால் இந்துக்கள் ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு போராட தயங்கினர். நாட்டை காப்பாற்ற ஆள் இல்லை என்று நினைத்தனர். வழக்கறிஞர்கள் பலர் இந்து விரோத கருத்து உள்ளவர்களாக திராவிட கட்சிகளால் மாற்றப்பட்டனர். முஸ்லிம்களுக்காக மூத்த வக்கீல்கள் அனைவரும் கட்சி பேதமின்றி முன்நின்று ஆஜர் ஆகின்றனர். கிறிஸ்தவர்களுக்கு பாதிரிகளின் பணபலமும், கிறிஸ்தவ வக்கீல்களின் துணையும் அபரிதமாக கிடைக்கின்றது. இந்துக்களுக்கு நீதிமன்றத்தில் வாதாட வக்கீல்கள் துணையும் இல்லை, வக்கீல்களை நியமிக்க பண பலமும் இல்லை . எனவே இந்து சமுதாயத்தை காக்க உணர்வுள்ள ஹிந்து வழக்கறிஞர்களை ஒன்று சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஹிந்து சமுதாய தர்ம போரில் வெற்றிபெற வழக்கறிஞர்களின் துணை அர்ஜுனனுக்கு தேரை ஒட்டிய கண்ணனைப் போல தேவைப்பட்டது.

களத்தில் இணையற்ற பணி....

ஏன்? எதற்கு ? எப்படி?

"தர்மம் காக்க விதி செய்வோம்."

இந்து வழக்கறிஞர் முண்ணனி செயல்பாடுகள்

காவல் துறையாலும், வருவாய் துறையாலும், இந்து சமய அறநிலையத் துறையாலும் இந்துக்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர் . எனவே சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த இந்துக்கள் போராட வேண்டிய தேவை உள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் துணை தேவைப்படுகிறது. இதை உணர்ந்த உணர்வுள்ள ஹிந்து வழக்கறிஞர்கள் சுமார் 1000 பேர் ஹிந்து வழக்கறிஞர்கள் முன்னணியில் இணைந்துள்ளனர். இந்துக்களுக்கு நீதி கிடைக்க மேலும் பல்லாயிரக்கணக்கான இந்து வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள் எனவே இந்து வழக்கறிஞர்கள் அனைவரும் இந்து வழக்கறிஞர் முன்னணியில் இணைவோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டுவோம்.

என்றும், எங்கும் தேசீய, தெய்வீகப் பணியில்