இந்து
இளைஞர்
முன்னணி

பாரதத்தின் வருங்காலத் தூண்கள்

பாரத்ததின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகின்ற நவ யுக சிற்பிகள் இளைஞர்கள் . அவர்களின் மன - குண நலன்களை சீரமைத்து, அவர்களது கல்வி நலன்களை காத்து தேச பக்தி மிக்கவர்களாக உருவாக்கிடவேண்டியே இந்து இளைஞர் முண்ணனி

நஞ்சை விதைக்கும் தீய சக்திகள்

தமிழகத்தில் தேச விரோத , பிரிவினை சக்திகள் அனைத்து கல்லூரிகளிலும், விடுதிகளிலும், நிறுவனங்களிலும் ஊடுரிவியுள்ளனர். சமூக விரோத சக்திகள் மாணவர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கின்றனர். அவர்களின் தீய நோக்கத்தை முறியடிக்க இந்து இளைஞர் முன்னணி ஜூலை 8- 2018 ம் ஆண்டு இந்து முன்னணி பேரியக்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது.

மாணவர் சக்தி – மகத்தான சக்தி

இளைஞர்களாகிய மாணவர்களுக்காக.. மாணவர்களின் நலனைக் காக்க.. மாணவர்களின் மனதிலுள்ள அச்சத்தைப் போக்கி அவர்களது மனதில் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்திட அவர்களை மிகச்சிறந்த தேசபக்தர்களாகவும், தெய்வபக்தி மிக்கவர்களாகவும் உருவாக்கிட, கல்வியில் தலைசிறந்தவராக மாணவர்களை உருவாக்கி பாரத தேசத்தை வல்லரசு ஆக்கிட. மாணவர்களின் நலனைக்காக்கும் அமைப்பாக.. அவர்களது கடமைகளை நினைவு படுத்திட ... அவர்களது உரிமையை மீட்டெடுக்க வாதாடும் அமைப்பாக.. இந்து இளைஞர் முன்னணி HYF (Hindu Youth Front) தமிழகம் முழுவதும் செயல்பட்டுவருகிறது.

இளைய

பாரதமே வா

ஏன்? எதற்கு ? எப்படி?

"அச்சம் தவிர்; அதர்மம் எதிர்"

களத்தில்

மாணவர்கள் மத்தியில் தேச பக்தியையும் தெய்வபக்தியும் வளர்க்கும் விதமாக சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த தினமான ஜனவரி 12 ம் தேதியை தேசிய இளைஞர் தினமாக இந்து இளைஞர் முன்னணி கொண்டாடி வருகிறது. மாணவர்களிடத்தில் தேசபக்தியை வளர்ப்பதற்காக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை முன்னிறுத்தி வீர தியாக தினமாக கொண்டாடி வருகிறது. இந்த தேசத்திற்காக தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்பணித்த டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடைய பிறந்ததினமான அக்டோபர் 15 ம் தேதியை தேசிய அர்ப்பணிப்பு தினமாக கொண்டாடி வருகிறது.

டாக்டர். APJ. அப்துல் கலாம்

தேசத்தின் இளைஞர்கள் திரு. ஏ.பி.ஜே.கலாம் ஐயாவை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அவர் தனது உடல், ஆன்மா முழுவதையும் இந்த தேசத்திற்காக அர்ப்பணித்தார். அவரது அர்ப்பணிப்பு வாழ்க்கையிலிருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். HYF சார்பாக அவரது பிறந்த நாளை அக்டோபர் 15 அன்று தேசிய அர்ப்பணிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. தேசத்தின் இளைஞர்கள் அவரது தியாகங்களை புரிந்து கொள்ள வைப்பது முக்கியமான மற்றும் இன்றியமையாததாகும்.

HYF ல் இணைய

நல்ல குணங்களை கற்றுக் கொள்ளவும், மேம்படுத்தவும், ஒரு முழுமையான மரியாதைக்குரிய மனிதனாக தன்னை வடிவமைத்துக் கொள்ளவும் தேசத்தின் இளைஞர்களை HYF வரவேற்கிறது. ஒவ்வொரு மாதமும் இளைஞர் முன்னணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.இளைஞர்களுக்கு HYF உறுப்பினர் அடையாள அட்டை வழங்குகிறது.ஆண்டுதோறும்தங்கள் உறுப்பினர் அடையாள அட்டையை இளைஞர் முன்னணி உறுப்பினர்கள் கட்டாயமாக புதுப்பிக்கவேண்டும். இளைஞர்களை துடிப்பானவர்களாக ஆக்கிட பல விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

என்றும், எங்கும் தேசீய, தெய்வீகப் பணியில்