திரு. ராஜகோபாலன்


அமரர் வழக்கறிஞர் திரு. ராஜகோபாலன் - இரண்டாவது மாநிலத் தலைவர்
தாணுலிங்க நாடார் மறைவுக்குப் பின் இந்துமுன்னணியின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மதுரை வழக்கறிஞர் திரு.ராஜகோபாலன். மதுரை கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர் .RSSல் மாவட்ட செயலாளராக இருந்து இந்துமுன்னணிக்கு தலைவரானார். அதிர்ந்து பேசமாட்டார். கடும்சொல் அறியாதவர். கதர் ஆடையை எப்போதும் உடுத்துபவர். நெற்றியில் எப்போதும் திருமண் இருக்கும். இவரின் வருமானத்தை நம்பி மட்டுமே குடும்பம் இருந்தது. 3மகன்களும் பள்ளிப் படிப்பில் இருந்தனர். மென்மையான சுபாவம் கொண்டவர் ஆனால் கொள்கையை ஒருநாளும் விட்டுக் கொடுக்காதவர்.


ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் . நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் எளிமையானவர் . கோபமே படாதவர் . காலையில் பிரச்சனை பற்றி அவருக்கு தெரிந்தவுடன் சிறு சிறு தொகையினை வசூல் செய்து மாலையில் சின்ன போஸ்டர் அடித்து இரவினில் அவரே தொண்டர்களுடன் சேர்ந்து ஒட்டி விடுவார். களத்தில் நின்று போராடி வெற்றி பெறுபவர். கீழக்கரையில் விநாயகர் ஊர்வலம் இசுலாமியர்களால் தடுத்து நிறுத்தப் பட்ட போது , நேரடியாக அங்கே சென்று எதிர்ப்பினை சுக்கு நூறாக்கி வெற்றிகரமாக ஊர்வலம் நடத்தினார். அப்போது களிமண் உருண்டையில் அப்போது களிமண் உருண்டையில் கண்ணாடி தூள்கள் , ஆணிகள் படித்து அவர் மீது வீசினர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிறிதும் கலங்காமல் இயக்கப் பணி தொடர்ந்தார்.

1991 சட்டமன்ற தேர்தலின் போது திருவல்லிகேணியில் போட்டியிட்ட மறைந்த வக்கீல் அழகு மாணிக்கத்திற்கு பிரச்சாரம் செய்தார். அப்போது அமைதி மார்கத்தினர் கூக்குரலிட்டு ரகளை செய்து பின்னர் கல்லெறிந்தனர். இதெற்கெல்லாம் அஞ்சாமல் அவர்களை எதிர் கொண்டார். திருப்பரம்குன்றம் மலை உச்சியில் திருக்கார்த்திகை தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற போராட துவங்கினார். மலை மேலே தர்கா இருப்பதை காரணம் காட்டி அரசு மறுத்து விட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து போராடினார்.அதனால் கோபமுற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டு அவரை படுகொலை செய்தனர் வழக்கம் போல திராவிட ஒட்டு பொறுக்கிகள் சொந்த பிரச்சனை என வழக்கை திசை திருப்பினர் . அதனால் கோபமுற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டு அவரை படுகொலை செய்தனர் .

10.10.1994 திங்கள் கிழமை காலை 7மணியளவில் வீட்டின் முன்புறம் அமர்ந்து செய்தித்தாள்கள் படித்துக் கொண்டிருந்தவரை ஒரு கும்பல் வந்து சரமாரியாக வெட்டி சாய்த்தது. வழக்கம் போல திராவிட ஒட்டு பொறுக்கிகள் சொந்த பிரச்சனை என வழக்கை திசை திருப்பினர் .ஆனால் ஹிந்து முன்னணியின் தொடர் முயற்சியின் விளைவாக ஜிஹாதி படுகொலை என ஒத்துக் கொள்ளப்பட்டு தடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிய பட்டது. திருநெல்வேலி சிறப்பு தடா கோர்ட்டில் வழக்கு நடத்தப்பட்டு 2011 ல் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்க பட்டது.தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தண்டணை அளிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

2012 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தற்போது நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ்,பாலி நாரிமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் தடா வழக்கில் தானாக முன் வந்து கொடுத்த முரண்பாடுகள் உள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கில் தண்டனை அளித்தது செல்லாது என்று பரபரப்பு தீர்ப்பளித்தனர்.வழக்கு ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி தனக்கு தமிழ் தெரியாது என்றும் தமிழில் வழங்கப்பட்ட வழக்கு ஆவணங்களை தான் படிக்கவில்லையென்றும் பொய் சாட்சியளித்தார், என்றால் இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசின் ஈடுபாடு எவ்வாறு இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

மேல்முறையீட்டாளர்களின் மனு ஏற்கப்பட்டு அவர்களுக்கு தடா நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை உள்ளிட்ட அனைத்து தண்டனைகளையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் மே 2017ல் தீர்ப்பளித்தனர். இந்து முன்னணி மாநில தலைவரின் கொலைவழக்கு இவ்வாறு முடிந்தது என்றால் நீதித்துறை, மற்றும் காவல்துறை ஜிகாதிகளுக்கு பயப்படுகிறதா அல்லது அவர்களுக்கு பணிகிறதா என பொதுமக்கள் பேசிக்கொண்டனர்.இந்த படுகொலையில் ஈடுபட்ட பலர் ஏற்கெனவே கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை, கோவை வீரகணேஷ் கொலை வழக்கு, திண்டுக்கல் இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் கொலை வழக்குகளிலும் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அமரர் திரு. ராஜகோபால் அவர்கள் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை . ஹிந்து முன்னணி பல மடங்கு வளர்ந்து விட்டது . ஹிந்து சமுதாயம் இன்னும் பலம் பெற வேண்டும் அன்னாரின் தியாகமும் , ஆசியும் நம்மை எப்போதுமே வழி காட்டும்.
