மாவீரன் சசிகுமார்

28-10-1980 ல் நடுத்தர வர்க்கத்தில் சின்னசாமி&ராதா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் தன்னுடைய பள்ளி படிப்பை சாய்பாபா காலனியில் உள்ள அங்கப்பா மேல்நிலை பள்ளியில் தொடங்கினார். 1993ல் 8ம் வகுப்பு படிக்கும்போது தன்னை இந்து முன்னணியில் இணைத்துக்கொண்டார் 1995ல் ரத்தினபுரி பகுதியின் 67வது டிவிசன் கிளை பொருப்பாளராக பொறுப்பேற்றார் பின் 67வது டிவிசன் தலைவர், முழு நேர ஊழியராக பொருப்பெடுத்து தொண்டாமுத்தூர் நகர செயலாளராக பணியாற்றினார் குடும்ப சூழ்நிலை காரணமாக 9ம் வகுப்பு படிக்கும்போது பள்ளிப்படிப்பை விட்டு விட்டு அண்ணா மார்க்கெட்டில் டீ மற்றும் முருக்கு வியாபாரம் செய்து வந்தார் அந்த சூழ்நிலையிலும் இந்து சமுதாய பணியில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து இந்து முன்னணி பணியை செய்து வந்தவர் வியாபாரம் செய்யும்போது கூட வாடிக்கையாளர்களிடம் இந்து சமுதாயத்தின் பிரச்சனையை எடுத்துக் கூறி அவர்களையும் இயக்க பணி செய்ய தூண்டியவர் மார்க்கெட் பகுதியில் அதிகமான ஆதரவாளர்களை உருவாக்கியவர். முழு நேர ஊழியராக இருக்கும்போது ரத்தினபுரி பகுதியில் இருந்து தொண்டாமுத்தூர் வரை மிதிவண்டியில் சென்று சுற்றுப்பயணம் செய்து எல்லா இடங்களிலும் இந்து முன்னணி கமிட்டியை அதிகப்படுத்தியவர். தன்னுடன் பலகும் எல்லா நண்பர்களையும் இந்து முன்னணி பணி செய்ய தூண்டியவர். அப்படி வேலை செய்யாதவர்களிடம் பேசுவதை குறைத்துக்கொள்வார்.

தன் குடும்பத்திலும் கூட அப்பா கம்யூனிஸ்டு என்று தெரிந்தும் அவரிடம் பேசி பேசி கடைசியில் அவரையும் இந்து உணர்வாளராக மாற்றியவர். தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இயக்க பணியில் ஈடுபடுத்தியவர். 2008 நவம்பரில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் கூட தன் இயக்க வேலையில்எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து செய்தார். 2000 ரத்தினபுரி பகுதியில் ரத்த தானம் முகாம் நடத்தி அந்த பகுதியில் இந்து முன்னணி வேலையை மக்களிடம் கொண்டு சேர்த்தார். செய்தி தொடர்பாளர் பொருப்பாளராக பொருப்பெடுத்து எல்லா செய்தியாளர்களிடமும் இணைந்து பழகி அணைத்து பத்திரிக்கைகளிலும் இந்து முன்னணி செய்திகளை வர செய்தார். இயக்கத்தை பற்றி ஆழமாக சிந்தித்து வேலை செய்யக்கூடியவர். இந்து முன்னணி வேலையை செய்தாலும் அணைத்து கட்சி காரர்களிடமும் நட்போடு பழகும் தன்மை கொண்டவர் யாரிடமும் கடுமையாக பேசதா குணமுள்ளவர். இயக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் கட்டாயம் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர். தான் படுகொலை செய்யப்படும் ஒரு நாள் முன்பு கூட திண்டுக்கல் பகுதியில் சங்கர் கணேஷ் என்ற பொருப்பாளர் தாக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து முன் நின்று நடத்தியவர்.தன் இறுதி மூச்சு உள்ளவரை இந்து சமுதாயத்தின் பணிக்காகவே வாழ்ந்தவர்.தன் தம்பிகள் இருவரையும் இயக்க பணியில் ஈடுபடுத்தி அவர்களையும் தொடர்ந்து வேலை செய்ய வைத்தார். 22-9-2016 அன்று இயக்க பணி முடித்து சுப்பிரமணியம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பும்போது முஸ்லிம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.