இராமேஸ்வரம் முனியசாமி

பாரத தேசத்தின் புனிதத் தலங்களில் தலைசிறந்தது. மண்ணெல்லாம் சிவலிங்கமான, ஆனந்தமான ராமேஸ்வரம் தீவினில் ராமநாத சுவாமிக்கு அடுத்ததாய் மக்களால் அறியப்படும் பெயர் முனியசாமி. முனியசாமி எனும் தெய்வம் இந்துக்களின் காவல் தெய்வம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் கொம்பூதி என்னும் சிற்றூரில் பிறந்தவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த முனியசாமி அவர்கள் இயற்கையிலேயே பிறருக்கு உதவும் மனப்பான்மை பெற்றிருந்தார்.ராமேஸ்வரம் தீவு பகுதியில் பொதுப்பணித் துறை சம்பந்தமான கட்டிடப் பணிகளில் ஒப்பந்ததாரராக செயல்பட்டு வந்தவர்.

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தபோது ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் நடைபெறும் விழாவான குருபூஜை விழாவிற்கு தலைமையேற்க ஆர்எஸ்எஸ் காரர்கள் அழைத்ததின் பேரில் ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற குரு பூஜையில் கலந்து கொண்டவர். ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் மனோதிடம் கட்டுப்பாடு நேரந்தவறாமை முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு அடுத்த ஆண்டு ராமேஸ்வரத்தில் நடைபெற்ற குரு பூஜையில் சாதாரண தொண்டனாக ரக்ஷக் எனும் காவல் காக்கும் பணியை செய்தார் சிறிது காலம் ஆர் எஸ் எஸ் எல் பணியாற்றியவர் தன்னுடைய போராட்ட குணம் காரணமாக தன்னை இந்து முன்னணி பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டவர் நாளடைவில் இந்து முன்னணி மாநில செயலாளராக உயர்ந்தார்.

 

1990 காலகட்டங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் காலணிகளை விட்டுச் செல்வதற்கு கோவிலின் பிரகாரத்திலேய கோவிலின் காலணி வைக்கும் பகுதியானது அமைக்கப்பட்டிருந்தது ஆதலால் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் கோயில் முதல் பிரகாரத்தில் நுழைந்து அங்கு தங்களின் காலணிகளை விட்டுச் செல்லும் வழக்கம் இருந்தது இதனை எதிர்த்து ராமேஸ்வரத்தில் முனியசாமி அவர்கள் இந்து முன்னணி மூலமாக சார்பாக பல போராட்டங்களை நடத்தினார் . ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை .

அதனால் முனியசாமி அவர்கள் இந்துமுன்னணி தொண்டர்களோடு இணைந்து ஒரு நாள் ராமேஸ்வரம் ஆலயத்திற்குள் நுழைந்து செருப்பு செருப்பு வைக்கும் இடத்தினை அடித்து நொறுக்கினார். அன்று முனியசாமி அவர்கள் செருப்பு வைக்கும் இடத்தை அடித்து நொறுக்கி அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் காலணிகளை விட்டுச்செல்லும் பகுதியானது கோயிலை விட்டு சற்று தூரத்தில் அமைக்கப்பட்டது .

இந்திய குடியரசு தலைவர் திரு.R. வெங்கட்ராமன் அவர்கள் கீழக்கரையில் அமைந்துள்ள ஒரு இஸ்லாமிய கல்லூரியை திறந்து வைப்பதற்காக வருகை தர இருந்தார் . அந்தக் கல்லூரி நிர்வாகம் பல மதமாற்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் மேலும் கீழக்கரை கடத்தல்காரர்களின் புகலிடமாகவும் போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தல் காரர்கள் புகலிடமாக இருந்து வந்தது.

அதை மறைக்கவே குடியரசு தலைவரை வைத்து நிகழ்ச்சி நடத்திட ஏற்பாடு செய்திருந்தனர். இதனை அறிந்த இந்து முன்னணி மாநில செயலாளர் முனியசாமி அவர்கள் பல எதிர்ப்புகளை தெரிவித்தார் மேலும் குடியரசுத் தலைவர்கள் வந்தால் கருப்பு கொடி காட்டுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்து முன்னணியின் எதிர்ப்பையும் மீறி குடியரசுத் தலைவர்கள் வருகை தந்ததால் கருப்புக்கொடி காட்டி எதிப்பு தெரிவிப்பதென தீர்மானிக்கப்பட்டது .

காவல்துறையும் அரசுத் துறையும் கருப்புக்கொடி காட்டாமல் தடுக்க பல பல அடுக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இச்சமயத்தில் முனியசாமி அவர்கள் மாறுவேடத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கே சென்று அவர் முன்பாக கருப்புக் கொடியை எடுத்துக் குடியரசுத்தலைவர் முன்பாக காண்பித்து பாரத் மாதா கி ஜே, ஓம் காளி ஜெய் காளி என விண்ணதிரும் கோஷத்தினை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தார் .

சுதாரித்துக்கொண்ட காவல்துறை வலைவீசி பிடித்து முனியசாமி அவர்களை கைது செய்து கடுமையாக தாக்கினார் ஆனால் முனியசாமி அவர்கள் எதிர்ப்பை தெரிவித்த வண்ணமே இருந்தார் .

புனிதத் தலம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் தீர்த்தம் குளிப்பதே பிரதானம். கோவிலில் அமைந்திருக்கும் 21 தீர்த்தங்களில் ஒரு தீர்த்தமானது பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் இருந்ததாலும் பக்தர்கள் நீராடி செல்வதாலும் சேரும் சகதியுமாக குளம் போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

மேலும் பக்தர்கள் நடந்து செல்லும்போது சகதியில் கால் பட்டு வழுக்கி விழுந்து பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டும் கொண்டும் இருந்தது . ஏன் இதனை நிர்வாகம் சரி செய்ய மறுக்கிறார்கள் என யோசித்த முனியசாமி அவர்கள் சிறுவர் சிறுமியருக்கு நீச்சல் உடையை அணிவித்து கோவிலுக்குள் தேங்கியிருந்த தண்ணீரில் நீச்சல் அடிக்க விட்டார். இதுபோன்ற தொடர் நூதன போராட்டத்தின் காரணமாக தீர்த்தமானது பைப்லைன் மூலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இன்று சுகாதாரமாகவும் சுத்தமாகவும் உள்ளது .

அரசு ஒப்பந்த வேலைகளில் பணியாற்றிக்கொண்டிருந்த முனியசாமி அவர்கள் இந்து முன்னணியில் இணைந்து முழுநேர ஊழியராக ஆனபின் வெவ்வேறு ஊர்களுக்கு சுற்றுப்பயணம் செய்வார். நித்தம் நித்தம் ஒவ்வொரு ஊராக சொல்லும்போது கைகளில் பணம் இல்லையெனில் டீக்கடை நாற்காலி மீது ஏறி இந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வார் பேச்சினை ஆர்வமாக கேட்பவர்களை இந்து முன்னணி பொறுப்பாளர்களாக மாற்றி அவர்களிடமே பயணத்திற்கான பணத்தையும் வாங்கிக் கொண்டு வந்து விடுவார்.

ராம ஜென்ம பூமி அயோத்தி விவகாரம் சூடு பிடித்துக் கொண்டிருந்த நேரம் அது 1989 காலகட்டம் அயோத்தியில் முதல் கரசேவைக்காக முனியசாமி அவர்களும் பல இந்து முன்னணி தொண்டர்களும் அயோத்திக்கு செல்லவிருந்தனர். அயோத்தி செல்வதற்கான பயண செலவு மற்றும் இதர செலவுகளுக்காக தேசபக்தியுள்ள சிலரிடம் நன்கொடை வசூலித்தனர். அச்சூழலில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் சத்ரியன் பட ஷூட்டிங்கிற்காக ராமேஸ்வரம் வந்திருந்தார் இதனை நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட முனியசாமி அவர்கள் விஜயகாந்த் அவர்கள் தங்கியிருந்த ராமேஸ்வரம் தமிழ்நாடு ஹோட்டலிற்கு சென்று விஜயகாந்தை சந்தித்தார் .

விஜயகாந்த் அவர்களிடம் அயோத்தி இந்த தேசத்தின் அடையாளம் அயோத்தியை நாம் மீட்டெடுக்க வேண்டும் அதற்காக நாங்கள் அயோத்தி செல்கிறோம் தங்களால் இயன்ற உதவியை செய்திடுமாறு கேட்டுக் கொண்டார் . விஜயகாந்த் அவர்கள் இது இது மத ரீதியான விவகாரம் மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் எனக்கு துளியும் விருப்பமில்லை ஆனால் இருந்தாலும் நீங்கள் உதவி என வந்துள்ளீர்கள் எனக் கூறி குறிப்பிட்ட தொகையை காசோலையாக கொடுத்தார் . செக்கை வாங்கிய முனியசாமி அவர்கள் விஜயகாந்த் அவர்களிடமே திரும்பக் கொடுத்து அயோத்தி ஆலயம் கட்டக்கூடாது என நினைப்பவர் கொடுக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை அந்தப் பணத்தைக் கொண்டு நாங்கள் அயோத்தி செல்ல மாட்டோம். நான் பிச்சை எடுத்தாவது நடந்தே சென்றாவது அயோத்தியில் ஆலயம் அமைத்திடுவோம் என்று சொல்லி அதை திரும்ப கொடுத்து விட்டு வந்து விட்டார் . இது போன்ற தீர்க்கதர்சிகளின் வாக்குதான் இன்றைய அயோத்தி வெற்றி வரலாற்றின் ரகசியம்.

ராமநாத சுவாமி திருக்கோவிலில் முஸ்லிம்கள் பலர் கடைகள் வைத்துள்ளனர் . கோவிலில் கடை வைத்துள்ள முஸ்லிம்கள் கோயில் வளாகத்திலேயே மாட்டுக்கறி சாப்பிடுவதும் போதை பொருள் பயன்படுத்துவதாக இருந்தனர் . இதனை தடுத்திட பல்வேறு போராட்டங்களை நடத்திய முனியசாமி அவர்கள் நக்சலைட் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரையில் 1990 ஜனவரி மாதம் பயங்கர ஆயுதங்களால் வெட்டப்பட்டார்.பயங்கரவாதிகளால் வெட்டப்பட்ட முனியசாமி அவர்களை சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் சேர்த்தனர் . சிகிச்சையில் இருந்த முனியசாமி அவர்களிடம் மருத்துவர்கள் உடல் நலம் பெற வேண்டி முட்டை மாமிசம் ஆகியவற்றை சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டனர் .

ந்து முன்னணி ஊழியராகும் முன்பு குடிப்பழக்கம், புகைப்பழக்கம் என பல்வேறு பழக்கங்களுக்கு ஆளாகியிருந்த முனியசாமி அவர்கள் இந்து முன்னணி முழுநேர ஊழியரான பின்பு இத்தீய பழக்கங்களை மட்டுமல்ல முட்டை முதலான அசைவம் பொருட்களைக்கூட தொடாமலிருந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது சிகிச்சை பலனின்றி 1993 ஜனவரி 21ம் தேதி பாரத அன்னையின் பாதம் அடைந்தார்.

மேலும் படிக்க