தியாக மலர் வீரசிவா

1964 ஆம் ஆண்டு குப்புசாமி ராஜம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.ஒரு அக்கா மற்றும் மூன்று தம்பிகள் உள்பட ஐந்து பேர் சகோதர சகோதரிகள் ஆவர். இடையர்வீதியில் சலவை தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த அவர் ஐந்தாம் வகுப்புவரை படித்தார். தனது 16 வயதில் ஆர்.எஸ் எஸ் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார். துணிச்சலுக்கு சொந்தக்காரர்.அவர் குடியிருந்து வந்த இடையர்வீதி பகுதியில் பிக்பாக்கட் திருடர்கள் அதிகமாக இருந்தனர்.அவர்களை துணிச்சலுடன் எதிர் கொண்டு மக்களை திரட்டி விரட்டி அடித்தார்.

மக்களுக்கு எந்த பிரச்சனை பிரச்சனை என்றாலும் முதல் ஆளாய் வந்து நிற்கும் குணம் கொண்டவர். தனிநபரும் தன்னலமில்லா குணமும் ..... நமது இயக்கம் 1985 களில் பெரிய வளர்ச்சியோ நிறைய பொறுப்பாளர்களோ இல்லாத காலகட்டம். அந்த காலகட்டத்தில் தனிநபரால் சமுதாய மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று அதற்காக தீவீர பிரசாரம் மேற்கொண்டவர்.தனிநபராக கோவை மேற்கு பகுதியில் பல கமிட்டிகளை உருவாக்கியவர். தன்னலமில்லா சேவையே தாய்நாட்டை உயர்த்தும் என அடிக்கடி கூறுவார்.

 

இந்துமுன்னணி பொறுப்பு...
இடையர் வீதி கிளைகமிட்டியில் இயக்க வேலை செய்துவந்த அவர் தனது தொடர்பணியால் கோவை மேற்குநகர இந்துமுன்னணி செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ் எஸ்.இரண்டாமாண்டு பயிற்சி முடித்த அவர் முழுநேர ஊழியராக இந்துமுன்னணி இயக்கத்தில் பணியாற்றினார். தனது பேச்சாற்றலால் பல பொதுக்கூட்டங்களில் இந்து சமுதாயத்தை பற்றி பேசி எழுச்சி பெற வைத்தவர். முஸ்லீம் இயக்கங்களின் பயங்கரவாதத்திற்கு எதிராக சவால் விட்டு பேசுவது வீரசிவாவின் தனிச்சிறப்பாகும். முஸ்லிம் பெண்ணை தாய்மதம் திருப்பி இந்து மணமகனுக்கு திருமணம் நடத்தி வைத்தார் .

தொடர் விவேகானந்தர் ஜெயந்தி....
வீரத்துறவி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ஆம் தேதியன்று இடையர்வீதி பகுதியில் விவேகானந்தர் ஜெயந்தி விழாவை நடத்தி நூற்றுக்கணக்காண இந்துக்களை வழிபட செய்தார்.தொடர்ந்துஆண்டு தோறும்அந்த நிகழ்ச்சியை நடத்தினார்.

அயோத்தி செங்கல்பூஜை....
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடுமுழுதும் ராமர் செங்கல் பூஜை நிகழ்ச்சி 1990 ல் ஏற்பாடு செய்யப்பட்து. அந்த நிகழ்ச்சிக்காக தொடர்ந்து 48 நாட்கள் வேலை செய்து பல இடங்களில் செங்கல் பூஜையை திறம்பட நடத்தி முடித்தார்.

வீரகணேஷ் மறைவும் வீரசிவா சபதமும்...
தன்னுடன் இயக்க வேலை செய்த வீரகணேஷ் முஸ்லீம் பயங்கரவாதிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டடது வீரசிவாவிற்கு ஒரு பக்கம் வேதனையை உண்டாக்கினாலும் இன்னொரு பக்கம் இன்னும் இந்து சமுதாய வேலையை அதிகப்படுத்த வேண்டும் என்ற லட்சிய வெறியோடு வேலை செய்தார். 1990 வீரகணேஷ் முதலாமாண்டு நினைவு நிகழ்ச்சி பொதுக்கூட்டம் வீரகணேஷ் பிறந்த கெம்பட்டி காலணியில் நடந்தது.அன்றைய காலகட்டத்தில் இந்து சமுதாய வேலையில் உள்ளவர்களை முஸ்லீம்கள் பத்வா எனும் முன்னறிவிப்பு செய்து கொலைக் கடிதம் போடுவது வழக்கம். வீரசிவாவிற்கும் பத்வா போட்டனர். அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வீரசிவா பத்வா பத்துமா...என்று சவால் விட்டார்.இந்த ஜென்மத்தில் இறந்தாலும் அடுத்த ஜென்மத்தில் இந்து தாயின் வயிற்றில் மீண்டும் பிறந்து வந்து இந்து சமுதாய பணி செய்வேன் என கர்ஜித்தார்.அவரின் பேச்சை கேட்டு பல இந்து இளைஞர்கள் இந்துமுன்னணியில் இணைந்தனர்.

வீரசிவா படுகொலை ...
தான் வாழ்ந்த நாட்களில் பெருமளவு இயக்க பணிசெய்த வீரசிவா 1991 செப்டம்பர் 5 ஆம் தேதி அதிகாலை காலைகடனுக்காக மாநகராட்சி கழிப்பிடம் செல்லும் வழியில் முஸ்லீம் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

வீரசிவாவின் அர்ப்பணிப்பு....
வீரசிவா இறந்திருக்கலாம்.ஆனால் அவர் கண்ட கனவு இன்னும் இறக்கவில்லை. அவர் போல் இயக்க பணி செய்ய இன்று லட்சக்கணக்காண இளைஞர்கள் இந்துமுன்னணியில் இணைந்து பணி செய்து வருகின்றனர். தான் வாழ்ந்த 27 வயதில் அவர் ஆற்றிய தேசப்பணியை முன்னுதாரணமாக கொண்டு நாமும் பணியாற்றி தேசம் காப்போம்! தெய்வீகம் காப்போம்!

மேலும் படிக்க