பாடி சுரேஷ் எனும் கர்ம யோகி

சமுதாயப் பணியில் அர்ப்பணமான திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமார் அவர்கள் குமரி மாவட்டம் இரணியல் அருகே கக்கோடு கிராமத்தில் பாகவதர் கேபி சாமி, சரஸ்வதி அம்மாள் ஆகியோருக்கு 1965 மகனாகப் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரி ஒரு சகோதரர். மனைவி புவனா மற்றும் கிருஷ்ணவேணி, ஹிரன்மயி என்ற 2 இரண்டு மகள்கள் உள்ளனர். 1990ல் சென்னையில் இசை ஆசிரியர் பயிற்சி பெற்று 1995 முதல் இரண்டு வருட காலம் ஆர் எஸ் எஸ்ஸின் பிரச்சாரக்காக இருந்தார். பின்னர் சங்கப் பணியில் மாவட்ட பொறுப்பில் பணி மேற்கொண்டார்.

1998ல் திருமணமாகி பத்து நாட்களில் சங்கத்தின் 3 ஆம் ஆண்டு பயிற்சிக்காக நாக்பூர் சென்றார். குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதமாற்றம் அதிவேகமாக நடப்பதையும் ஹிந்துக்கள் எல்லாவிதத்திலும் புறக்கணிக்கப்படுவதையும் கண்டு மனம் வெதும்பி அவருடைய பணியை குறைத்துக் கொண்டு இயக்க பணிக்கு இரவு பகலாக அதிகமாக நேரம் கொடுக்க ஆரம்பித்தார் அதற்காக 1994 இல் சென்னையில் குமரிமாவட்ட பாதுகாப்பு கமிட்டி ஆரம்பிக்கப்பட்டு அண்ணா நகரில் மாநாடும் நடத்தி குரல் கொடுத்தவர். 1995ல் குறளகத்தின் அருகில் சத்தியாகிரக போராட்டம் நடத்தியதில் உறுதுணையாக இருந்தவர்.

 

2002 முதல் இந்து முன்னணி அம்பத்தூர் நகர பொறுப்பேற்று 2004ல் திருவள்ளூர் மாவட்ட துணை தலைவராகவும் 2011இல் திருவள்ளூர் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்ட தலைவராகவும் பொறுப்பேற்று வேலை செய்தவர்.

குமரி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை எல்லா நிகழ்ச்சிகளையும் சென்னையில் நடத்த வேண்டும் என்பதில் மிக ஆவலோடு இருந்தவர்‌ அந்த அடிப்படையில் அம்பத்தூர் பகுதியில் ஆலயம், ஆலய நிலங்களை காக்க மகாசிவராத்திரியன்று குமரி மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சிவாலய ஓட்டத்தை பாடியில் 1994- ல் நடத்தி சிவ பக்தர்களை ஒருங்கிணைத்து இயக்கத்துக்கு வலு சேர்த்தவர்

குமரியில் இருந்து சென்னைக்கு வரும் இந்துக்களை ஒருங்கிணைத்து இயக்க வேலையை பகிர்ந்து கொடுக்க சென்னைவாழ் குமரிமாவட்ட சங்கமம் என்ற நிகழ்ச்சியை 2006 முதல் குமரி மண்வாசனையோடு அம்பத்தூரில் நடத்திட இந்து இயக்கங்களுக்கு உறுதுணையாக இருந்து வேலை செய்தவர். அதன் மூலம் அந்த பகுதியில் திருவிளக்கு பூஜைகள் சமய வகுப்புகள் நடத்தி அதில் வெற்றியும் கண்டவர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் மத மாற்றத்தைத் தடுத்து பள்ளிகளில் மதப் பிரச்சாரத்தை தடுப்பது, பயங்கரவாதச் செயல்களை தடுத்தது, ஆலயங்களையும் சொத்துக்களை மீட்டு எடுத்தது, பயங்கரவாதிகளை கண்டித்து பல இடங்களில் போராட்டம் நடத்தி சிறை சென்றது என தன்னுடைய வாழ்க்கையையே போராட்டக் களமாக மாற்றிகுடும்பத்தை பற்றி கவலைப்படாமல் முழு சமுதாய கண்ணோட்டத்துடன் வேலை செய்த மாபெரும் தியாகி. இறுதியாக அவர் வசிக்கும் பகுதியில் கோயில் நிலங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து இருப்பதை அரசு அதிகாரிகளுக்கு கோடிட்டுக் காட்டியதால் பயங்கரவாதிகளால் 18.06.2014 படுகொலை செய்யப்பட்டார் மறக்க முடியாது அவருடைய தியாக செயல்களை.

மேலும் படிக்க