பைபிள் ஷண்முகம்

1992 இல் ஒரு நாள் காலையில் செய்தி விமர்சனம் என்று புதிதாக சென்னை வானொலியில் நிகழ்ச்சி ஒலிப்பரப்பானது. அதில் ஒரு காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சி நாதன் போன்றவர்கள் எல்லாம் தீவிரவாதியாக பார்க்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் தியாகிகளாக போற்றப்படுகிறார்கள். அதுபோல விடுதலைப் புலி பிரபாகரன், சந்தன கடத்தல் வீரப்பன் போன்றவர்களும் பார்க்கப்படலாம் என்று பேசிக்கொண்டே போனார் அந்த தொகுப்பாளர். எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது..

உடனடியாக களத்தில் இறங்கினார் சென்னை மாவட்ட பொறுப்பாளர் பைபிள் சண்முகம். உடன் மாவட்ட பொறுப்பாளர் பாலு மற்றும் அப்போது ஏபிவிபியில் இருந்த கல்யாண ராமன் அவர்களோடு சென்னை வானொலி நிலைய இயக்குநரை பார்த்து வெளுத்து வாங்கினார். உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குள் அந்த நிகழ்ச்சியை தயாரித்த நபர் நேரிடையாக இந்து முன்னணி அலுவலகத்திற்கு வந்து.. வீரத்துறவியிடம் மன்னிப்பு கேட்டார்.

அத்தகைய வீரத் திருவுரு பைபிள் சண்முகம்
பிறந்தது 10.11.1960, மறைந்தது (கொலை செய்யப்பட்டது) 14.04.1995.
திருமணம் ஆனது : 22.01.1987,
பெற்றோர் பெயர்கள் அப்பா : நாராயணசாமி அம்மா : குப்பம்மாள்
குழந்தைகள் : ஒரு மகன், ஒரு மகள்
நாராயணசாமி குப்பம்மாள் தம்பதிக்கு மொத்தம் 16குழந்தைகள். சண்முகம் 8 வதாக பிறந்த குழந்தை. இதற்காக திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 16 செல்வம் பெற்றவர் என்று ஆசி வழங்கி கவுரவித்தார்

சாதாரண உடம்பு. குண்டும் இல்லை,ஒல்லியும் இல்லை. சாதாரண உயரம். சற்று கருப்பு. ஆனால் முகத்தில் எப்போதும் சிரிப்பு. எந்த நேரமும் முகத்தில் cooling glass, .ஜீன்ஸ் பான்ட் போட்டு insert செய்த சட்டை / t ஷர்ட். பார்த்த உடனே அனைவருடனும் சகஜமாக பேசும் பாங்கு.இந்து முன்னனி மேடைகளில் இடி முழக்கமும் சிரிப்பு வர வைக்க கூடிய கலகலப்பான பேச்சாளர். பைபிளில் அனைத்து அதிகாரங்களையும் நன்று படித்து பல கிருத்துவ பாதிரிகளை வாதத்தில் மடக்கியவர் அதனாலேயே சண்முகம் பைபிள் சண்முகம் ஆனார். இதனால் பல வழக்குகளை சந்தித்தவர் பைபிள் சண்முகம்.

மேலும் படிக்க