வீரமகன் குமரி பாலன்

ஆகஸ்டு_8_பயங்கரவாத_எதிர்ப்பு_தினம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற வேளிமலை(குமாரகோவில்) குமாரசுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது "பிரம்மபுரம்"என்ற சிற்றூர். பிரம்மபுரம் வீரத்திற்கும்,தர்மத்திற்கும் பெயரும் புகழும் பெற்ற பிடாகை ஆகும்.குமரி மாவட்டத்தில் முதல் முதலாக ஆர்.எஸ்.எஸ்.ஆரம்பிக்கப்பட்ட ஊர். இந்த ஊரில் பெயரும் புகழும் பெற்ற குடும்பத்தில் பத்மநாபபுரம் நகராட்சியின் நகர்மன்ற தலைவராக சீரும் சிறப்புமாக பணி ஆற்றியவர் உயர்திரு.C.P.பத்மநாபபிள்ளை. இவரின் மூத்த மகன் அஞ்சல் அதிகாரியான K.P.கோலப்பாபிள்ளையின் ஒரேமகன் பத்மநாபதாஸ்(விஷ்ணு பண்ணையார்) -ராதா தம்பதிகளுக்கு நான்கு ஆண் குழந்தைகள் . இரண்டாவது மகன் கோலப்பதாஸ் (எ) பாலன் 17-7-1961 அன்று ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.

தனது தொடக்க பள்ளி படிப்பை பிரம்மபுரம் அ.தொ.பள்ளியில் படித்தார். நல்லாசிரியரான தலைமை ஆசிரியர் பிச்சுமணி பாலனின் திறமைக்கு மெருகூட்டினார். பேச்சுப்போட்டி, பாட்டு போட்டிகளில் திறமையை காட்ட வைத்தார். புலியூர்குறிச்சில் நடு நிலை பள்ளிலும் பயின்றார். உயர் நிலை கல்வியை மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் உயர் நிலை பள்ளியில் பயின்றார். அப்போது பள்ளி ஆண்டு விழாவில் மாறுவேடப்போட்டியில் உண்மையிலே படம் எடுத்து ஆடுகின்ற நல்ல பாம்பை பாம்பாட்டியிடமிருந்து தந்தை வாங்கி கொடுக்க அதை கொண்டுச்சென்று மகுடம் ஊதி மேடையில் பாம்பை படம் எடுத்து ஆடச்செய்தார். அப்போது பள்ளியே நடுங்கி சத்தம் போட்ட போது சிறிதும் அச்சமின்றி பாம்பாட்டியாக நடித்து முதல் பரிசை பெற்றான்.

 

அது போன்று பாரதியார்,சுவாமி விவேகானந்தர், வீரசிவாஜி,வீர பாண்டிய கட்டப்பொம்மன்,போன்ற வேடங்களணிந்து அதோடு ஒன்றிவிடுவார். பாலன் சிறந்த நாடக நடிகனாகவும் திகழ்ந்தார் -கண்ணன் கருணை, கள்ளியங்காட்டு நீலி,சுவாமி அய்யப்பன்,வீர சிவாஜி,போன்ற நாடகங்களில் திறம்பட நடித்து மக்களின் பாராட்டை பெற்றார்.. PUC படிப்பை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியிலும் B.Sc பட்டபடிப்பை லட்சுமிபுரம் கலை&அறிவியல் கல்லூரியிலும் பயின்றார். அவர் தினசரி ஷாகா செல்லும் ஸ்வயம்சேவகனாக திகழ்ந்தார்.

நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். ஊரில் இவர் முயற்சில் வீர சிவாஜி இளைஞர் மன்றம் ஒன்றை ஆரம்பித்து இளைஞர்களை தன்பால் கவர்ந்தார். பிரம்மபுரம் ,குமாரகோவில்,தென்கரை, கக்கோடு, பரம்பை...போன்ற ஊர்களில் சுவாமி மதுரானந்தா ஜி மகராஜ் அவர்களின் வழிகாட்டுதலில்.சமயவகுப்பு எடுத்தார்...

ஆண்டுதோறும் பக்தி சுற்றுலா அழைத்து செல்வது.பஜனை பாடுவது ஏன்றால் அவனுக்கு கொள்ளை பிரியம் எனவே பாலன் சுற்று வட்டார மக்களின் செல்லபிள்ளையாக திகழ்ந்தான்... ஒரு நாள் அருகில் உள்ள ஊரில் அரசு குடும்ப கட்டுபாடு துறை சார்பாக மக்கள் விழிப்புணர்வு நாடகம் போட்டபோது நமது இந்து தெய்வங்களை இழிவாக பிரச்சாரம் செய்ததை கண்டு கொதித்து எழுந்த பாலன் தனது நண்பர்களுடன் அவர்களுக்கு தகுந்த பாடம் புகுட்டினான்

1982-ல் மண்டைக்காடு கலவரம்.
இந்து சகோதரிகள் இருமுடி கட்டி அம்மே சரணம்!தேவி சரணம!மண்டைக்காட்டு அம்மே சரணம்!!என்று பக்தி பரவசத்துடன் வந்த சகோதரிகளை கிறித்துவ மிஸ்ஸினரிகளின் தூண்டுதலில் காம வெறி பிடித்த கிறித்தவ மீனவர்கள் துகில் உரித்து பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.

இதனை தடுக்க காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது.இதனை தொடர்ந்து குமரியில் மிக பெரிய கலவரம் நடைப்பெற்றது.கடற்கரையை சுற்றியுள்ள இந்து ஊர்களை இரவு நேரங்களில் மீனவர்கள் தாக்க தொடங்கினார்கள்.இந்த நேரத்தில் பாலன் தனது ஊரைச்சார்ந்த சகோதரர்களை அழைத்துக்கொண்டு இரவு பாதுகாப்பு கொடுக்க சென்றான். பல முறை ஊர்களுக்குள் நுழைந்த கலவரக்கார மீனவர்களை விரட்டி அடித்தனர்.

1984-ல ல் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்துகளுக்கு பரிந்துபேச போராட சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என உணர்ந்து இந்து முன்னணி சிங்கம் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியது. அப்போது பாலன் பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் வை.பாலச்சந்தர் அவர்களை வெற்றி பெற வைக்கவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார். தொகுதி முழுவதும் வீதி வீதியாக இந்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தனது குரலில் வாகன பிரச்சாரம் செய்தார்.

அதைப்போன்று தனது ஓவிய திறமையால் சுவர்களில் விளம்பரம் செய்தார்.பாலனை போன்ற நூற்றுக்கணக்கான சகோதரர்கள் உழைப்பால் தர்மம் வென்றது. இந்து முன்னணி வேட்பாளர் வை.பாலச்சந்தர் வெற்றி பெற்றார்.இந்துக்கள் ஒன்று பட்டால் வெற்றி நிச்சயம் என உறுதி ஆனது.சட்டமன்றத்தில் சிங்கம் கர்ஜனை செய்தது. பாலன் சமய பணி,சங்க பணி என சிறப்பாக பணியாற்றிய நேரத்தில் 1985-ல் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ஸ்ரீமான் இராம.கோபாலன் அவர்கள் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீர உரை நிகழ்த்தினார். தூங்கிக்கொண்டிருந்த இந்துக்களை தட்டி எழுப்பி "இந்து மதம் உயர்ந்த மதம் அதற்காக பணிச்செய்ய துடிப்பபு மிக்க இளைஞர்கள் தேவை.தாய்நாட்டுக்கு பணிச்செய்ய இளைஞர்களே வாருங்கள்" என்று தக்கலையில் நடைபெற்றத கூட்டத்தில் அறைகூவல் விடுத்தார்.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாலன் உட்பட மூன்று பேர் கைகளை உயர்த்தினார்கள்,அவர்களிடம் கோபால் ஜீ விசாரித்தார்.இறுதியில் பாலனிடம் அடுத்த வாரம் சென்னை வந்திடுமாறு அழைத்துச் சென்றார்.

சென்னைக்கு வருவேன் என கோபால் ஜிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற மெதுவாக காயை நகர்த்த ஆரம்பித்தான்.முதலில் தான் வேலை பார்த்த மாரைக்கார் மோட்டார் (கார்) நிறுவனம் நாகர்கோவில்(மணிமேடை) வேலை விட்டு நின்றான். பின்பு அம்மாவிடம் மெதுவாக பேசினான். அம்மா ஒரே அழுகை அப்போது அவன் கூறியது அம்மா நீ நாட்டின் வெளியே இருந்து வரும் எதிரிகளிடம் இருந்து நாட்டை காக்க இரு மகன்களை விமான படைக்கு அனுப்பியுள்ளாய்,நாட்டின் உள்ளே இருக்கும் எதிரிகளிடமிருந்து (மத மாற்றம் செய்பவர்,தேச துரோகி) காக்க நான் செல்லுக்கிறேன். உங்களை காத்திட தம்பி ரமேஷ் இருக்கிறான். ஆகவே நீங்கள் தைரியமாக இருங்கள்.நான் ஆறே மாதம் இருந்து விட்டு வந்து விடுக்கிறேன் என கூறி அம்மாவின் பாதங்களில் நெடுஞ்சாணாக (சாஸ்டாங்கமாக)விழுந்து விட்டான்.

மூத்த சகோதரியாக இருந்து பல பக்தி கதைகள் கூறி நல்லது கெட்டதற்கு ஆலோசனை கூறி வளர்த்த அப்பாவின் இளைய சகோதரியிடம் கூறி அம்மாவை சமாதானம் செய்தான்.அவர்கள் திருமதி ராணி கிருஷ்ணா ராஷ்ரிய சேவிகா சமதி பொறுப்பில் உள்ளார்கள். ஒருவழியாக பாலன் சென்னையை வந்தடைந்தான். இந்து முன்னணி பேரியக்கத்தின் முழு நேர ஊழியாரக இராம-கோபாலன் ஜி அவர்களின் ஆலோசனை பெயரில் சிறப்பாக செயல்பட்டான். இந்த கால கட்டத்தில் இன்று மத்திய அமைச்சராக இருக்கும் பொன். இராதாகிருஷ்ணன் அவர்களும் இந்து முன்னணி முழு நேர ஊழியராக பணியாற்றி வந்தார்கள் இருவரும் கோபால் ஜி யை தங்கள் கண் போன்று பாதுகாத்தனர்.

பாலன் ஊரில் இருக்கும் போது அவன் துணிகளை அவன் துவைத்தது இல்லை ஆனால் கோபால் ஜியின் உதவியாளராக மாறிய பின் காலையில் அவருடைய துணிகளை துவைத்து காயப்போட்டு மடக்கி வைத்ததை பார்த்தது பலருக்கு மிகுந்த ஆச்சரியம்.இது நமது பாலனா என்று எண்ண தோன்றியது . அது போன்று கீரை வகைகள் அவனுக்கு பிடிக்காத ஒன்று பின்பு அதை விரும்பி சாப்பிட தொடங்கினான். அது போன்று கோபால் ஜியுடன் அய்யா தாணுலிங்க நாடார் வீட்டிற்கு செல்லும் போது அய்யாவின் மனைவி பாலனை தனியாக அடுக்களை பக்கம் அழைத்து மீன் வைத்து தன் மகனை போன்று அன்புடன் உணவு அளிப்பார்கள். அது போல் கோபால்ஜி செல்லும் வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் பாலனால் கவரப்பட்டு மாமா மாமா என்று சுற்றி சுற்றி வருவார்கள். அவர்களுக்கு தேசப்பக்தி கதைகள் பாடல்கள் ஜோக்ஸ் போன்றவைகளை கூறி தன் பால்கவர்ந்து விடுவான்.

இந்த கால கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.மூன்றாம் ஆண்டு பயிற்சியை முடித்தார். கோபால்ஜியால் பட்டை தீட்ட பட்ட பாலன் மிக சிறந்த திறமைசாலியாக திகழ்ந்தான். ஒரு முறை ஊருக்கு வந்த பாலன் குமாரகோவிலின் அவல நிலை கண்டு தட்டிக்கேட்க உழவார பணி செய்ய ஒரு சங்கம் தேவை என உணர்ந்த பாலன் முருக பக்தர்களை ஒன்று திரட்டி "வேல் முருகன் சேவா சங்கத்தை"துவக்கி வைத்தார் .இந்த கால கட்டத்தில் கோபால்ஜியுடன் தி.க.கோட்டையான சேலத்தில் இந்து முன்னணி கூட்டத்தில் வீர துறவி இராம.கோபாலன் ஜி சிறப்புரை பேசிக்கொண்டுயிருக்கும் போது திராவிட கும்பல் மின்சாரத்தை தடைச்செய்துவிட்டு சரமாரி கற்களை வீசினார்கள் சில நிமிடம் கழித்து மின்சாரம் வந்த போது மேடை முழுவதும் கற்கள் பலருக்கு காயம்.மேடையின் கீழே இந்து முன்னணி புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்த நமது பாலனே ஒரு நொடி பொழுதில் பல நாற்காலிகளை மடித்து கோபால்ஜியின் முன் பிடித்த படி நின்றான்.கற்கள் நாற்காலிகளில் பட்டு கீழே கிடந்தன அன்று கோபால் ஜியின் உயிரை சாமார்த்தியமாக காத்த விதம் அனைவரையும் ஆச்சாரியத்தில் ஆழ்த்தியது...

வீரதுறவி இராம-கோபாலன் அவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வந்த நேரத்தில் ஜூலை 17 1984 கோயம்பத்தூரிலிருந்து-மதுரைக்கு ரயிலில் இராம.கோபாலன் ஜியும் உடன் பாலனும் வருகை தந்த போது மதுரையில் வைத்து முஸ்லீம் பயங்கரவாதி பாட்ஷா கோபால்ஜி யை கொலை செய்யும் நோக்கில் கழுத்தில் வெட்டிய வெட்டு தலையில் பட்டு தலை இரண்டாக பிளந்து ரத்தம்கொட்டியது .உடன் வந்த பாலன் மிக பயங்கரமாக சத்தம் போட்டு கதற ரயில்வே காவலர்களும் பொது மக்களும் சேர்ந்து பாட்ஷா வை கையும் களவுமாக பிடித்தனர். அங்கு கூடி இருந்தவர்கள் பாலனின் நடவடிக்கையை பாராட்டினார்கள். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிட்சை அளித்ததின் காரணமாகவும், ஆயிரக்கணக்கான இந்துகளின் பிராத்தனையாலும் இறைவனது அருளாலாலும் மறு ஜென்மம் எடுத்தார்.

இன்றும் அவருடைய மண்டையில்வெட்டுபட்ட பகுதி மிகவும் தாழ்ந்து தான் உள்ளது அன்று முதல் காவி தொப்பி வைத்து வருகிறார். இந்த கால கட்டத்தில் தமிழகத்தை ஆண்ட தி.மு.க.அரசு சிறுபான்மை தேச துரோகி காயிதே மில்லத் பெயரை திண்டுக்கல் மாவட்டத்திற்கு வைத்து விடுகிறது.இதை எதிர்த்து அனைத்து இந்து இயக்கங்களும் எதிர்கிறது.பெயரை மாற்றும் வரைஇந்து முன்னணியின் போராட்டம் தொடரும் என அறிவித்ததுடன் போராட்டதிற்கு தலைமை தாங்கி நடத்திட பாலனை திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணிஅமைப்பாளராக அறிவிக்கப்படுகிறார்.வீர துறவியால் தனக்கு தரப்பட்ட பணியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று பாலன் இரவு-பகல் தூங்காது கடுமையாக திட்டங்களை தீட்டி பணி செய்தார். திண்டுக்கல் மாவட்ட இந்துகளைஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம், சத்தியாகிரகம் ,உண்ணாவிரதம், போராட்டம் நடத்தி இந்து எழுச்சியை தட்டி எழுப்பினார்.இறுதியில் இந்து எழுச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்து பணிசெய்தார்.திண்டுக்கலில் பணி செய்ய துவங்கியுடன் பாலனை அனைவரும் அன்புடன் குமரி பாலன் ஏன அழைக்க தொடங்கினார்கள்.

குமரி பாலனுடன் தோளோடு தோளாக நின்று பணியாற்றிய ஆர்.எஸ்.எஸ்.இயக்க சகோதரர் திண்டுக்கல் நாகராஜன் அவர்களை 20-3-1990 அன்று பயங்கரவாதிகள் இருட்டில் வெட்டிக்கொலை செய்து விட்டார்கள் இதனால் வெகுண்டு எழுந்த குமரி பாலன் எப்பாடுப்பட்டாவது தேச துரோகியின் பெயரை மாற்றியே தீருவேன் என சபதம் எடுத்து பணியை தீவிரமடைய செய்தார்.பாலன் தெரு தெருவாக தெருமுனை கூட்டங்களில் பேசியும் பலபோராட்டங்கள் நடத்தியும் அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்திற்கு சூட்டப்பட்ட காயிதே மில்லத் பெயரை நீக்க கோரி பாலன் செய்த பணிகளால் தி.மு.க.அரசு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நீக்கி நாகைப்பட்டிணம் மாவட்டத்திற்கு சூட்டுகிறது. பாலனின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியை அனைத்து இந்து இயக்கங்களும் பாராட்டின . மாவட்ட அமைப்பாளராக இருந்த பாலன் மாநில இந்து முன்னணி இணை அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இதற்கு இடையே திண்டுக்கல் போலீஸ் பாலனை கைது செய்ய வீட்டிற்கு வருகிறது. பாலனை சரியாக அடையாளம் தெரியாத அவர்கள் வீட்டில் இருந்த பாலனிடம் குமரி பாலன் எங்கே என்று விசாரிக்க எந்த பதட்டமும் இன்றி நான் பாலனின் தம்பி என்றும் சில நிமிடங்களுக்கு முன் தான் வெள்ளிமலை ஆஸ்ரமத்திற்கு சென்றான் என எந்தவித பதட்டமும் இன்றி கூறி காவலர்களை அனுப்பி வைத்த விதம் அவனின் தனி திறமை ஆகும்.

இந்து முன்னணி வெளியீடுகளை அதிக அளவில் கூவி கூவி மக்களை கவரும் வண்ணம் பேசி விற்பதில் பாலனுக்கு நிகர் பாலனே. 1993-ம்ஆண்டு ஊருக்கு வந்த போது அவனுடன் மிகவும் நெருக்கமானவர் பிரம்மபுரம் சமய வகுப்பு ஆசிரியர் T.வேலாயுதன் ( சுகாதார துறை ஊழியர்) அவர்களுடன் வெள்ளிமலை விவேகானந்தா ஆஸ்ரமத்தில் சுவாமி மதுரானந்தா மகராஜ் அவர்களை சந்திக்க சென்ற போது ஆழ்வார் கோவில் சந்திப்பில் நடந்த விபத்தில் உடன் சென்ற அண்ணாச்சி வேலாயுதன் ஜி அவர்களின் உயிர் பிரிந்து விடுகிறார் இந்த விபத்தில் பாலனின் காலில் எலும்பு முறிவு ஏற்படுகிறது.மருத்துவமனையில் சிகிட்சை பெறுகிறார்...

நாகர்கோவில் கள்ளியங்காடு சுஷ்ரூஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலனின் வலது முழங்காலில் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிட்சை செய்து ஸ்டீல் பொறுத்தப்படுக்கிறது.அம்மாவின் கனிவான கவனிப்பால் விரைவில் முன்னேற்றம் ஏற்படுகிறது. வீட்டில் ஒய்வில் இருக்கிறார். இந்த நேரத்தில் தக்கலை அருள்மிகு பெருமாள் திருக்கோவிலில் ஆண்டு விழா நடைப்பெறுகிறது அங்கு நடைப்பெறும் ஆன்மீகவாதிகளின் சொற்பொழிவு கேட்க தினமும் மாலை செல்வது பழக்கம் ஒரு நாள் அன்று வர வேண்டிய சிறப்பு பேச்சாளார் வரவில்லை கோவிலின் செயலாளர் பாலனின் சமய வகுப்பு ஆசிரியர் சக்திவேல் சார் பாலனிடம் சென்று இன்று சிறப்புரை ஆற்றுமாறு பாலனை அழைத்தார் முதலில் மறுத்த பாலன் பின்பு பேச சம்மதித்து மேடைஏறி சுமார் ஒரு மணி நேரம் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். வந்திருந்த அனைவரும் பாராட்டினார்கள். இதுவே பாலனின் கடைசி சமய மாநாடாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை...

அது போன்று R.S.S. மீது 3 வது முறையாக அரசு விதித்த தடையை நீக்கியதை கொண்டாடும் விதமாக பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரை ஆற்றுமாறு அப்போதைய விபாக் பிரச்சாரக் பு.மு.ரவிக்குமார் அழைப்பு விடுத்தார்.நாகர்கோவில் நாகராஜ கோவிலின் தெற்கு ரத வீதியில் கூட்டம் நடைப்பெற்றது அதில் கலந்துக்கொள்ள பாலனை வேஷ்டியில் வர கூறினார்கள் ஆனால் குமரி.பாலனோ இல்லை முழு கணவேஷ் உடன் தான் வருவேன் என கூறி அப்படியே வந்தார். விபாக் பிரசாரக் பாலனின் கால் முறிவை கூறி இருக்கையில் அமர்ந்தபடி பேச கூறினார்.ஆனால் பாலனோ தேச பக்தர்கள் முன்னால் அமர்ந்து பேசுவது.சரியில்லை என கூறி சுமார் ஒரு மணி நேரம் வலியுடன் நின்றபடி எழுச்சி உரை ஆற்றினார். இதுவே குமரி மாவட்டத்தில் பாலனின் கடைசி பேச்சாக இருக்கும் என யாரும் நினைக்கவில்லை.பாலனின் கணவேஷ் சீருடையில் இருக்கும் புகைப்படத்தை எடுத்தவர் ராமன் ஜி அவர்கள்.

பாலன் கால்கள் சரியாகி திண்டுக்கல் & நாகப்பட்டிணத்தில் தேசப்பணி செய்ய புறப்பட்டபோது இராம கோபாலன் ஜி அனுமதி வாங்க பேசிய போது அவர்கள் கூறினார்கள் பாலன் கால் சரியாகும் வரை இரண்டு மாதம் சென்னை அலுவலகத்தில் வந்து பணிச்செய்யுமாறு கூறினார். சென்னைக்கு சென்றுடைந்த குமரி.பாலன்.அலுவலக பணியில்முழுமையாக ஈடுப்பட்டார். 8-8-1993 அன்று சென்னையில் நடந்த ஆர்.எஸ்.எஸ்.குருபூஜை விழாவில் கலந்துக்கொண்டு விழா முடிந்து இயக்க சகோதரர்களுடன் R,S,S.அலுவலகத்தில் உணவு அருந்த பின்னால் சென்றார் பாலன். சூட்கேசுடன் நுழைந்த இருவர் விநாயகர் சிலை வைக்க வேண்டும் என கேட்ட வண்ணம் சூட்கேஸை வைத்து விட்டு ஓடிய சில வினாடிகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ்.வெடிக்குண்டுகள் பயங்கர சத்ததுடன் வெடித்து ஆர்.எஸ்.எஸ்.யின் 3 மாடி கட்டிடம் தரைமட்டமாக ஆகிவிட்டது.

இடிபாடுகளுக்கு இடையே மாட்டிய தேச பக்தர்கள் 11பேர் மண்ணோடு மண்னாக புதைந்து விட்டார்கள். இடிந்து விழுந்தது வெறும் கட்டிடம் அல்ல தேசபக்திக்கான கோயில்...... பிரிந்த உயிர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல அன்று மரணமடைந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இதைப்போன்றே தியாக மயமான வாழ்க்கை வரலாறு இவர்களை போன்றவர்களின் தியாகங்களால் தான் நாமும் தேசமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அவர்களை இன்றும் வணங்குவோம்.....

மேலும் படிக்க