வீரமிகு இளைஞன் கோட்டாறு குமார்

மண்டைக்காடு கலவரத்திர்குப்பின் நாகர்கோவில் நாகராஜா திடலில் இரண்டாவது இந்து பாதுகாப்பு மாநாடு 1982 ம் ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட்து. பெரிய அளவில் இந்துமுன்னணி சார்பில் ஏற்பாடுகள் நடை பெற்றது. லக்ஷக் கணக்கில் பொதுமக்களும் தன எழுச்சியாக திரள ஆரம்பித்தனர், மக்கள் செல்வாக்கும் இந்து ஒற்றுமையும் கூட ஆரம்பித்தவுடன் காவல் துறை மாநாடு நடைபெரும் நாள் காலை மாநாட்டை தடை செய்தது.நாகராஜா திடலில் இந்துக்கள் திரள்வதை தடை செய்தவுடன் வீரத் துறவி .கோபால்ஜியும் தாணுலிங்க நாடாரும் மாநாட்டை ஊர்வலமாக மாறறினர். ஊர்வலம் துவங்கியவுடன் காவல் துறை கண்முடித்தனமாக தாக்க ஆரம்பித்தனர்.தடியடியை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் முன்னேற ஆரம்பித்த உடன் காவல் துறை யாரும் எதிர் பாரத நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது.

காவல்துறை தாக்குதலின் கொடுமை தாங்காமல் நாகராஜா கோவிலுள் ஓடியவர்களையும் விடாமல் துறத்தி தாக்கியது காவல்துறை. இதனால் கோவில் உட்பகுதியிலும் ரத்தக்கறை படிந்தது. இந்த சமயத்தில் இந்து எழுச்சி மாநாட்டில் கலந்துகொண்ட குமார், நாகர்கோவில் கோட்டார் சந்திப்பில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தன்னுடைய சட்டையை கழற்றி மார்பை காண்பித்து முன்னே நின்று வீரத்தை வெளிப்படுத்தினார் அட்டூழிய அராஜக காவல்துறை கண்மூடித்தனமாக சுட்டதில் வீரமிகு இளைஞன் குமார் வீர மரணம் அடைந்தார். இராம. கோபாலன், தாணுலிங்க நாடார், அன்றைய குமரி மாவட்ட VHP தலைவரும் திரு.பொன்.ராதாகிருஷ்ணனின் தந்தையுமான பொன்னய்யா ஐயப்பன் மற்றும் 12 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜாமினில் செல்ல நீதி மன்றம் அறிவுறுத்தியும் ஜாமீன் கோராமல் சிறையிலேயே 30 நாட்கள் 15 பேரும் இருந்தனர். பின்னர் அரசே வழக்கை கைவிட்ட்து.