ராமேஸ்வரம்
ஸ்ரீ வாலறுந்த
ஆஞ்சநேயர்
கோவில்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் வாலறுந்த ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது . ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்காக ஆஞ்சநேயர் காசிக்கு சிவலிங்கத்தை தேடி சென்றார் அவர் வருவதற்கு தாமதம் ஆனதால் சீதாதேவி மணலில் செய்துகொடுத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு முடித்துவிட்டார் .
அதன் பிறகு வந்த ஆஞ்சநேயர் தன்னுடைய வாலால் மணல் லிங்கத்தை அகற்ற முயற்சிக்க, அப்போது ஆஞ்சநேயரின் வால் அறுந்து போனது வரலாறு . அந்தப் புனிதமான இடத்தில் காஞ்சி பரமாச்சாரியார் மற்றும் பூஜனீய ஸ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமி அவர்கள் துணைகொண்டு திரு ராமகோபாலன் ஜி அவர்களின் சீரிய முயற்சியால் அத்தி மரத்தில் ஆஞ்ச நேயர் உருவாக்கப்பட்டு தமிழகம் முழுவதும் வலம் வந்தார் . பின்பு தனுஷ்கோடியில் பல கோடி ராம நாம ஜெபம் செய்து அந்த அத்தி ஆஞ்சநேயர் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய அளவில் ஆலயம் அமைக்கப்பட்டது .தற்போது இந்த ஆலயமானது பிரம்மாண்டமாய் கட்டப்பட்டுள்ளது. நமது ஆலயத்தில் மாதந்தோறும் 108 திருவிளக்கு பூஜையும்.
ஹனுமன் ஜெயந்தி அன்று 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெற்று வருகிறது. நமது ஆலயத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. கோடைகாலத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கு பண்பாட்டு வகுப்பும் நடத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாது இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம் என பல்வேறு சேவைப்பணிகளும் நடைபெற்று வருகிறது.
கோவிலின் பின்புறத்திலேய அன்னதானமடம் அமைக்கப்பட்டுள்ளது. மடத்தின் தரை தளத்தில் இராமேஸ்வரம் யாத்ரீகர்களின் பசி தீர்க்கும் நோக்கோடு தினந்தோறும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. முதல்தளத்தில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரும் யாத்ரீகர்களுக்காக சேவை நோக்கோடு தங்குமிடமும் செயல்பட்டு வருகிறது.
அதன் பிறகு பால்தாக்கரேவின் அரசியல் தன்னளவில் மாற்றம் பெற்றதை பார்க்க முடிகிறது. இவர் கூட்டங்களில் பேசும் குட்டிக் கதை வெகு பிரபல்யம் அனேகமாக தமிழகத்தின் அரசியல் குட்டிக் கதை பேச்சிற்கு துவக்கமே இவராகத்தான் இருக்க வேண்டும். தொட்டியில் உள்ள நீரில் முழுகும் நிலை வந்தால் தாய் குரங்கு தன் குட்டிக் குரங்கின் தலையை நீரில் அழுத்தி தொட்டியின் விளிம்பை தவ்வி பிடித்து தன்னைக் காத்துக்கொள்ளும். ஆனால் காட்டில் தாய்ப்பசு புலியோடு சண்டையிட்டு இறந்தாலும் பரவாயில்லை தன் கன்றை காக்கும் எனவே இந்துக்கள் தாய்ப்பசுவாக இருக்க வேண்டுமே அல்லாமல் ஒருபோது தாய்க் குரங்காக ஆகிவிடக் கூடாது என்று சொன்னார்.
ஒரு பாறை இடுக்கில் மாட்டிக் கொண்டு தன் வாலை இழந்த ஒரு நரி தன் சகாக்களின் கேலியில் இருந்து தப்பிக்க திடிரென்று வானத்தில் தேவர்கள் தெரிகிறார்கள்,ரம்பா ஊர்வசி எல்லாம் ஆடுகிறார்கள் என்று பொய் சொல்ல ஆரப்பித்தது. எங்களுக்கு ஏன் தெரியவில்லை என்ற போது வால் அறுந்தால்தான் கண்ணுக்கு தெரியும் என்றதாம்.உடனே மற்ற நரிகளும் வாலை அறுத்துக் கொண்டு எங்கே தெரியவில்லை என்று மீண்டும் கேட்ட போது மெதுவாக சொன்னது முதல் வாலறுந்த நரி,"கேலியில் இருந்து தப்பிக்கவே பொய் சொன்னேன் நீயும் அப்படியே தப்பிக்க இந்த பொய்யை சொல்" என்றதாம். வாலறுந்த நரி கதை போல பல கதைகளை சொல்லி மதமாற்றம்,இந்து ஒற்றுமை,தேசபக்தி என எல்லாவற்றையும் எளிமையாக மக்களிடம் சொல்லி புரிய வைத்தவர். மிகச்சிறந்த தேசபக்தரும்,இந்து ஒற்றுமைக்காக களப்பணியில் தீவிரமாக செயல்பட்டவர்.