1980 - 1990
1980
1980 ஜூன் மாதம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாநிலக் செயற்குழு கூட்டம் கரூரில் உள்ள நாரத கான சபாவில் நடைபெற்றது . அதில் இந்துமுன்னணி இயக்கம் உருவானது.
மாநில அமைப்பாளராக திரு.இராம்.கோபாலன் அவர்களுக்கு பொறுப்பு தரப்பட்டது.இந்து முன்னணி எனும் பெயர் எப்படி சூட்டப்பட்டது ? இதற்கு முன்னால் சேலம் ராமசாமி என்று ஒருவர் இருந்தார் . அவர் இந்து ஆலயப் பாதுகாப்புக்காகப் பல பணிகளைச் செய்திருக்கிறார் . அவர் இந்து மக்கள் முன்னணி அமைப்பை நடத்தி வந்தார் . இந்து மக்கள் முன்னணி என்பதில் இந்து என்றாலே மக்கள் தான் , எனவே , அதனை இந்து முன்னணி எனச் சுருக்கி வைக்கப்பட்டது .
1981
1981 கோட்டை கோயிலும் ஹிந்து எழுச்சியும்
அப்போது வேலூர் , திருவண்ணாமலை இரண்டும் ஒருங்கிணைந்த ஒரே மாவட்டமாக , வட ஆற்காடு மாவட்டம் என்ற பெயரில் இருந்தது . வேலூரில் ஹிந்துக்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று சில இளைஞர்களுடன் நடந்த கூட்டத்தில் திரு. இராம.கோபாலன் கேட்டார் .
1982
குமரி மாநில மாநாடு - எழுச்சி கண்ட குமரி இந்துக்கள்
1982 - ம் ஆண்டு கன்யாகுமரி மாவட்ட இரண்டாவது இந்து ஒற்றுமை எழுச்சி மாநாடு நாகர்கோவிலில் நடத்த முடிவு செய்யப்பட்டது . தமிழக அரசு சிறுபான்மை ஒட்டிற்காக மாநாட்டை நடத்த தடை விதித்தது . தடையை மீறி மாநாடும் ஊர்வலமும் நடத்த முயன்ற ஐயா தாணுலிங்க நாடார் , வீரத்துறவி இராம கோபால்ஜி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர் .
1983
திருவல்லிக்கேணி விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா
தெய்வீக தமிழகத்தை நாத்தீகத்தால் நாசமாக்கியவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க தமிழகத்தில் எவரும் இல்லாத காலத்தில்தான் நமது இந்து முன்னணி பேரியக்கம் துவங்கப்பட்டது.
1953 - ல் முதன் முதலாக ஈ.வெ.ரா. பிள்ளையார் சிலையை உடைக்கும் அந்த மாபாதக செயலை துவக்கி வைத்தார் . 1972 - ல் அதன் உச்சகட்டமாக சேலத்தில் நடந்த தி.க. மாநாடு மற்றும் ஊர்வலத்தில் நடந்த அசிங்கங்களை எழுதுவதற்கும் , பேசுவதற்கும் இயலாத காரியம் அந்தளவுக்கு நமது கடவுளைப் பற்றி கொச்சைப் படுத்தி பேசினார்கள் .
1984
காரைக்கால்
ஹிந்துக்களின் திருமண பதிவை மீட்டது
காரைக்கால் பிரஞ்ச் ஆட்சியின்போது மக்களின் பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகியவை அந்தந்த கொமியூன், பஞ்சாயத்து, நகராட்சி அலுவலகங்களில் பதிவு செய்யப்படும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பழக்கமாகும். 1984 –ல் புதுச்சேரி அரசு திடீரென்று இந்த சட்டத்தை மாற்றி கிருஸ்துவ,முஸ்லீம் மட்டும் தங்களது பிறப்பு, இறப்பு,திருமணம் ஆகியவற்றை அந்தந்த கொம்யூன் ,பஞ்சாயத்து, நகராட்சி அலுவலகங்களின் பதிவு செய்து கொள்ளலாம். ஹிந்துக்கள் தங்களது திருமணத்தை வீடு, மனை ஆகியவற்றை பதிவு செய்யும் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டது.
1985
பெரியகுளம்
உலகத்தில் பல நாடுகள் உள்ளன. அதில் அனைத்து தேசத்திலும் தீண்டாமை உள்ளது .இந்த தீண்டாமையை போக்குவதற்காக நமது பாரத தேசத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் தீண்டாமையை வேரோடு அகற்றுவதற்கு பல்வேறு முயற்சி எடுத்து உள்ளனர்.
1986
வீரத்தாய் பட்டம்
மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் இந்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது மிகப்பெரிய ஆபத்திற்கு வழிவகுக்கிறது . இந்துக்களின் மக்கள் தொகை மட்டும் குறைந்து வருவதும், இந்துக்கள் மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதும் மிக விரைவில் இந்துக்களை சிறுபான்மை ஆக்கிவிடும் அபாயம் என்பதை புள்ளி விபரங்களுடன் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் வாயிலாக இந்து முன்னணி பிரச்சாரம் செய்தது.
1987 இந்து குரல்
1994 காயல்பட்டினத்தில் முஸ்லிம் பகுதியில் மேற்கு பார்த்த சிவாலயம் உள்ளது. அந்த சிவாலயம் அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது. சிவாலயம் சுற்றி உள்ள இடங்களை முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். மற்றும் கோவிலுக்கு செல்லும் பாதைகளில் சுண்ணாம்பு காளவாய் அமைத்து பாதையை ஆக்கிரமிப்பு செய்தது. இந்து முன்னணி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவிதமான முன் ஏற்பாடும் அதிகாரிகள் செய்யவில்லை. அதன்பின் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்கள் நேரடியாக காயல்பட்டணம் சென்று சுவாமி தரிசனம் செய்ய அறிவிக்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகளும், சுண்ணாம்பு காலவாயும் அகற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இடமும் மீட்கப்பட்டது.
1988 கோவை தி.க
அக்டோபர் மாதம் இந்துக்கள் 95% உள்ள தேவேந்திரவீதியில் தி.க. மன்றம் முன்பு உள்ள விளம்பரத்தட்டியில், இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி எழுதியதை தட்டிக் கேட்டதில் ஏற்பட்ட தகராறில் மன்றம், கொடி, பெயர்பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
1989
காயிதே மில்லத் பெயர் நீக்கம் - திண்டுக்கல் காக்கப்பட்டது.
1989 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது வெற்றி பெற்றவுடன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு காயிதேமில்லத் பெயரை சூட்டியது .அதைக் கண்டித்து ஹிந்து முன்னணி போராட்டத்தில் இறங்கியது . அப்போது மாநில தலைவராக இருந்த அட்வகேட் ராஜகோபாலன் அவர்கள் அந்தப்போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
1990
கழுகுமலை
கழுகுமலை முருகன் கோவில் ஓடாத தேரை இந்துமுன்னணி போராட்டத்தின் வாயிலாக ஓட வைத்தது.