2011 - 2020

2011 - 2020

2011
திருப்பூர் வெள்ள நிவாரணம்

வெள்ள நிவாரண பணிகளில் - துணைக்கரம் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பூர் மாநகரில் இயற்கை அன்னை மழை ரூபத்தில் மிகப்பெரும் சோதனையை தந்தாள். மழையின் காரணமாகவும், நகரின் மத்தியில் செல்லக்கூடிய நொய்யல் ஆற்றின் கரைகளில் உடைப்பெடுத்ததன் காரணமாகவும் வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்தனர்.

மேலும் படிக்க

2012
கோயில் நில மதிப்பு

மூன்று லட்சத்திற்கு விற்கப்பட இருந்த சங்கரநாராயண சுவாமி கோவில் இடம் 9 கோடியாக உயர்வு இந்து முன்னணி சாதனை. திருநெல்வேலி மாவட்டம், அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான வடக்கு புத்தூர் கிராமத்தில் உள்ள, 5 ஏக்கர் நிலத்தினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மனோ கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை ரூ.3, 21,865/- க்கு பல்கலைக்கழகத்திற்கு விற்பனை செய்ய 08.02.2012ல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டார். அதுகுறித்த ஆட்சேபணை 12.03.12 க்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க

2014
கடலூர்

கடலூர் மாவட்டம் முழுவதும் இயேசுவே இந்தியாவையும், தமிழ்நாட்டையும் ஆசீர்வதியும் என்று பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டது. இந்து முன்னணி சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டது. அது அவர்களின் பிரார்த்தனை, இதில் என்ன தவறு என்று மாவட்ட நிர்வாகம் நமது புகாரை தட்டிக் கழித்தது. பதிலுக்கு நாமும் பேனர் வைத்து அதில் சிவபெருமானே ஜெருசலத்தையும், ரோமையும், வாடிகனையும் ஆசீர்வதியும் என்று எழுதி இருந்தது. அடுத்த நாள் கடலூர் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டது

மேலும் படிக்க

2015


புதிய தலைமுறை

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி பெண்களுக்கு தேவையா? என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அது மார்ச் 8, 2015ம் தேதி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு தொடர் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் கடிதம் மூலமாகவும் நம் எதிர்ப்பை பதிவு செய்தோம்.

மேலும் படிக்க

2016


வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் உள்ள கங்கை அம்மன் திருக்கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது . இரவு நேரத்தில் வண்ண வண்ண பட்டாசுகள் வெடிப்பது அந்த நிகழ்வில் ஒரு சிறப்பு அம்சம். லட்சக்கணக்கான மக்கள் அந்த விழாவில் பங்கேற்பார்கள். காவல்துறை திடீரென்று எந்தவித முன்னறிவிப்பின்றி விழா நடக்கின்ற நாளில் கடைகளை அடைக்க கூறி வானவேடிக்கை வெடிக்க கூடாது என்று தடை விதித்தனர்.

மேலும் படிக்க

2017

உள் நாட்டு பாதுகாப்பு மாநாடுகள்
தமிழகம் முழுவதும் தேசவிரோத இந்து விரோத நக்சல் பிரிவினைவாத தனித்தமிழ் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மிகப்பெரிய அளவில் நடைபெறுகின்ற மதமாற்றம் , லவ் ஜிகாத், நில ஆக்கிரமிப்பு, நக்சல் ஊடுருவல்கள் போன்ற பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி, தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் என்பதை வலியுறுத்தி 11 கோட்டங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டன . அனைத்து பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மாநாடு மிகச்சிறப்பான வகையில் வெற்றியடைந்தது.

மேலும் படிக்க

2018


வால்போஸ்டர் இல்லை, SMS இல்லை, வாட்ஸ்அப் இல்லை. நேரடி சந்திப்பின் மூலம் தகவல் கொடுத்து மிக பிரம்மாண்டமான பொறுப்பாளர்கள் சந்திப்பு திருப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. 60 வார்டுகளில், 720 கமிட்டிகளில் இருந்து 4,929 பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட நிகழ்ச்சியில், இந்து ஜாக்ரன் மன்ச் அகில பாரத இணை ஒருங்கிணைப்பாளர் பிரேம்ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருப்பூர் இந்துமுன்னணி வரலாற்றில் ஒரு மைல்கல்...

மேலும் படிக்க

2019- கோலம் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்


தேர்தல் சமயத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் ஒரு அறிவுஜீவி தேர்தல் அதிகாரி அங்குள்ள கோலம் ஒரு கட்சியின் சின்னத்தை பிரதிபலிப்பதாக கூறி அதை அழிக்கச் செய்தார். இந்து முன்னணி இதை கண்டித்து போராட்டத்தை அறிவித்ததுடன், சமூகவலைத்தளங்களில் ஆலயங்களில் அத்துமீறல் நடக்கக்கூடாது என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டதன் மூலம் மீண்டும் அதே கோலம் அதே இடத்தில் வரையப்பட்டது.

மேலும் படிக்க

2020- கொரோனா பேரிடர் சேவைகள்


கொரோனோ வைரஸ் தாக்குதல் காலத்தில் களத்தில் இந்துமுன்னணி... உலகமே அஞ்சி நடுங்கி ஒதுங்கி இருந்த போது, தமிழகத்தில் இந்துமுன்னணி சகோதரர்கள் உயிரை துச்சமென மதித்து மதம் பார்க்காமல், மனிதம் பார்த்து சேவை செய்யும் புனிதப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க